இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி வைஸ் அட்மிரல் Ajay Kochhar (Vice Chief of the Naval Staff of the Indian Navy) இன்று (2026 செப்டம்பர் 09) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
அதற்கமைய, இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி, கடற்படையின் பாரம்பரிய சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு கடற்படைத் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதியினால் பிரதான அதிகாரி உள்ளிட்ட கடற்படை நிர்வாகக் குழுவினர் இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானிக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில், இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானிக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையே மூலோபாய மட்டத்திலான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருதரப்பிற்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.













