EVENT NEWS 2026

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

01 Sep 2026

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர், அதிமேதகு H.E. Wiebe Jakob DE BOER உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் (2026 செப்டம்பர் 01) கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், இந்த விஜயத்தின் போது, கடற்படை பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவை சந்தித்தனர்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவருக்கும் கடற்படை பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதிக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக நட்புறவு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Accessibility Tools