இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இன் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமாண்டர் யாபா வீரதுங்க, 2026 செப்டம்பர் 07 ஆம் திகதி காங்கேசன்துறை ‘PH Bay’ வளாகத்தில் அக்கப்பலின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
அதற்கமைய, கடற்படை மரபுகளுக்கு அமைவாக, புதிய கட்டளை அதிகாரி இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம-II இற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கப்பலின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கொமாண்டர் சுசிரி சில்வாவினால் உத்தியோகபூர்வமாகக் கடமைகள் புதிய கட்டளை அதிகாரியிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன், கொடி அதிகாரி கடற்படை கப்பற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் வெற்றிலைக்கேணி கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் சமீர ஜயசூரிய கலந்துகொண்டார்.
1 /
6













