EVENT NEWS 2026

Trinco Dialogue - 2026’ திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

01 Sep 2026

‘Enhancing Maritime Operational Readiness Through Energy Efficiency: Addressing Contemporary Strategic Challenges’ எனும் கருப்பொருளின் கீழ் 11 ஆவது முறையாக நடத்தப்பட்ட ‘Trinco Dialogue – 2026’ மாநாடு, இன்றைய தினம் (2026 செப்டம்பர் 01) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கடற்படை பிரதிப் பிரதம அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கலந்துகொண்டார்.

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் இளநிலை கடற்படை பணியாளர் பயிற்சிப் பாடநெறியினால் (Junior Naval Staff Course) ஏற்பாடு செய்யப்பட்ட 11 ஆவது ‘Trinco Dialogue – 2026’ மாநாட்டின் முதன்மை உரையை, கொமடோர் அதிகாரி கடற்படைத்தளம் (கிழக்கு) கொமடோர் பிரியங்கர திசாநாயக்க ஆற்றினார். இம்மாநாட்டில் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், கடல்சார் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் இளநிலை கடற்படை பணியாளர் பாடநெறியின் மாணவர் அதிகாரிகள் ஆகியோரால் இம்முறை கருப்பொருளுக்கு அமைவான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதற்கமைய, அதிக ஆற்றல் திறனை அடைவதற்காக; தொழில்நுட்பம், கோட்பாடுகள், பயிற்சி, செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் விநியோகங்கள் அடங்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியமும், இந்தியப் பெருங்கடலின் சமுத்திர பாதுகாப்பு பங்குதாரர்களின் மீள்தன்மை திறனை வலுப்படுத்துவதற்காக பயனுள்ள ஆற்றல் மேலாண்மையின் அவசியமும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகளும், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி பெறும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools