EVENT NEWS › 2026

கடற்படை தளபதி உட்பட 14 சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண விருது வழங்கி கௌரவிப்பு

30 Sep 2026

25 வருடங்களுக்கும் குறையாத கறைபடாத தொடர்ச்சியான சேவைக்காலத்தைக் கொண்ட முப்படை நிரந்தரப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண விருது வழங்கும் நிகழ்வு, இன்று (2026 செப்டம்பர் 30) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கடற்படைத் தளபதி உட்பட 14 சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைப் பிரதானி ரியர் அட்மிரல் எச்.ஆர்.எப்.எம். திசேரா, சுகாதார மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ​வைத்தியர் ரியர் அட்மிரல் பி.ஜே.பி. மாரபே, வடமேற்கு கடற்படைப் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்டினாண்டஸ் மற்றும் தென்கிழக்கு கடற்படைப் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜி.எஸ்.டி. வீரசூரிய ஆகியோருக்கு 'விசிஷ்ட சேவா விபூஷண' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், ரியர் அட்மிரல் எம்.டபிள்யூ.வி. மாரபன (ஓய்வு), ரியர் அட்மிரல் ஆர்.ஏ.சி.என். ரத்நாயக்க (ஓய்வு), ரியர் அட்மிரல் ஏ.ஏ.ஏ.ஆர். அபேசிங்க (ஓய்வு), ரியர் அட்மிரல் எச்.எச்.எம்.பி. த சில்வா (ஓய்வு), ரியர் அட்மிரல் எச்.எஸ். பாலசூரிய (ஓய்வு), ரியர் அட்மிரல் ஆர்.ஆர். களுபோவில (ஓய்வு), ரியர் அட்மிரல் சி.ஏ.பி. அந்தோதனி (ஓய்வு), ரியர் அட்மிரல் சி.டி. ராஜபக்ஷ (ஓய்வு) மற்றும் ரியர் அட்மிரல் பி.கே. வர்ணகுலசூரிய (ஓய்வு) ஆகிய ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கும் 'விசிஷ்ட சேவா விபூஷண' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 28 சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 15 சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 'விசிஷ்ட சேவா விபூෂண' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Image Courtesy : President's Media Division

Accessibility Tools