கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான இரு சிறுவர்களை கடற்படையினர் மீட்டனர்

16 Aug 2026

நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட்ஸ்கி (Jetski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அப்படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளான இரு (02) சிறுவர்களை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக் குழுவினர் (4RU) 2026 ஆகஸ்ட் 16 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிரகரி வாவியில் உயிர்காப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக் குழுவின் கடற்படை வீரர்கள் இவ்விபத்தைக் அவதானித்துள்ளனர். அதற்கமைய, அப்பிரிவைச் சேர்ந்த குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரு சிறுவர்களையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் 11 மற்றும் 13 வயதுடைய மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படை மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

உயிர்காப்பு கடமைகள் மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளுக்காக கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதுடன், இதுபோன்ற அவசர சந்தர்ப்பங்களில் உடனடியாகத் தலையிட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Accessibility Tools