இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இந்திய படகு மற்றும் 9 மீனவர்கள் கடற்படையினரால் கைது

22 Jul 2026

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லையில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் 2026 ஜூலை 22 ஆம் திகதி மாலை வேளையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

இதன்படி, இந்த நடவடிக்கையின் போது இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Accessibility Tools