சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்டிருந்த முக்குத்தூள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் சட்டத்தின் பிடியில்

20 Jul 2026

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் 2026 ஜூலை 19 ஆம் திகதி மேற்கொண்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்டிருந்த 'முக்குத்தூள்' எனப்படும் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தீகாயு நிறுவனம், கல்முனை பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான கடையொன்றும் வீடொன்றும் சோதனையிடப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 'முக்கு தூள்' எனப்படும் முப்பது (30) கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் (01) சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் மற்றும் முக்குத்தூள் தொகுதி என்பன கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools