காலி மீன்பிடித் துறைமுக வளாகத்திலுள்ள படகுத் தளத்தில் ஏற்பட்ட திடீர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினரின் உதவி
காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள படகுப் பராமரிப்புத் தளத்தில் இன்று (2026 நவம்பர் 08) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தெற்கு கடற்படை கட்டளையின் தீயணைப்புக் குழுவினரின் உதவியை வழங்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்றில் திடீரென தீப்பற்றியுள்ளதை அவதானித்த இலங்கை கடற்படைக் கப்பலான தக்ஷிண நிறுவனத்தினர், உடனடியாகச் செயற்பட்டு, விமானப்படையின் தீயணைப்புப் பிரிவு, காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் மீனவ சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தீயைக் கட்டுப்படுத்தி, அது மேலும் பரவாமல் தடுத்தனர்.
மேலும், எத்தகைய அவசர அனர்த்த நிலைமைகளின்போதும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது.













