சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடிக் இலைத் தொகையொன்று நீர்கொழும்பில் சட்டத்தின் பிடியில்

06 Nov 2026

இலங்கை கடற்படையினரால், நீர்கொழும்பு கெப்புங்கொட கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 2026 நவம்பர் 05ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடிக் இலைத் தொகையொன்று கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால், நீர்கொழும்பு கெப்புங்கொட கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அப்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பதினொரு (11) பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும், 422 கிலோகிராமிற்கும் அதிகமான பீடிக் இலைத் தொகையொன்று இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடிக் இலைத் தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Accessibility Tools