இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் கடத்த முயன்ற தங்கத் தொகுதி ஒன்று சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளையினால் நேற்று (2026 நவம்பர் 17) தலைமன்னார் பேசாலை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேகநபர்கள், ஒரு (01) கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத் தொகை மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் இந்தத் தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்காலத்தில் வெளியிட இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளது.
1 /
6













