இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் 09 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் பிடியில்
யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு தெற்கே சர்வதேச கடல்சார் எல்லைக் கோட்டை (IMBL) மீறி, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஒன்பது (09) இந்திய மீனவர்களும் 2026 ஒக்டோபர் 03 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
அதன்படி, யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு தெற்கே அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை கண்காணித்ததுடன், மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. அத்துடன், அதிலிருந்த ஒன்பது (09) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களும் இந்திய மீன்பிடிப் படகும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருப்பதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.













