சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 690 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் சிலாவத்துறையில் சட்டத்தின் பிடியில்
2026 ஒக்டோபர் 07 ஆம் திகதி இரவு, இலங்கை கடற்படையினரால் சிலாவத்துறை கல்லாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர்கள் இருவர் (02) சட்டத்தின் பிடியில் சிக்கினர்.
இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால், சிலாவத்துறைக்கு அப்பால் கல்லாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, குறித்த படகில் 20 உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 690 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், சந்தேகநபர்கள் இருவர் (02) மற்றும் குறித்த டிங்கி படகு (01) ஆகியவை இவ்வாறு கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரினால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 34 மற்றும் 41 வயதுடைய ஆனவாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், பீடி இலைகள் அடங்கிய தொகை மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.













