சீரற்ற வானிலை காரணமாக பேரிடர் நிவாரண பணிகளுக்காக கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

21 Sep 2026

இலங்கைக்கு வடகிழக்கே, வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் காரணமாக, தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 171 கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (2026 செப்டம்பர் 21) காலை நிலவரப்படி 14 பேரிடர் நிவாரணக் குழுக்கள் தெற்கு மற்றும் மேற்கு கடற்படை தளபத்தியங்களால் களமிறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தெற்கு கடற்படை தளபத்தியத்தினால்; தவலம பகுதியில் இரண்டு (02) குழுக்களும், ஹினிதும பகுதியில் ஒரு (01) குழுவும், மாபலகம பகுதியில் ஒரு (01) குழுவும், நாகொட பகுதியில் ஒரு (01) குழுவும் என ஐந்து (05) பேரிடர் நிவாரணக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்கு கடற்படை தளபத்தியத்தினால்; நாவலப்பிட்டிய பகுதியில் இரண்டு (02) குழுக்களும், யட்டியாந்தோட்டை பகுதியில் இரண்டு (02) குழுக்களும், சீதாவக்கை பகுதியில் இரண்டு (02) குழுக்களும், இரத்தினபுரி பகுதியில் மூன்று (03) குழுக்களும் என ஒன்பது (09) பேரிடர் நிவாரணக் குழுக்கள் தேவைக்கேற்ப ஈடுபடுத்துவதற்காக களமிறக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools