சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற வாசனைத் திரவியங்களுடன் 05 சந்தேகநபர்கள் கற்பிட்டி கடற்பரப்பில் கைது

20 Sep 2026

இலங்கை கடற்படையினர், கற்பிட்டி பத்தலங்குண்டுவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் இன்று (2026 செப்டம்பர் 20) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஏலக்காய் மற்றும் இஞ்சி அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் உரைகளை ஏற்றிச் சென்ற பல நாள் படகு (01) ஒன்றுடன் ஐந்து சந்தேகநபர்களை (05) கடட்படையினர் கைது செய்தனர்.

இதன்படி , மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான எடிதர II மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பரப்பில் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய பல நாள் படகு (01) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஏலக்காய் மற்றும் இஞ்சி அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது உரைகளுடன் (09) குறித்த படகு (01) மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் (05) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 59 வயதிற்கு இடைப்பட்ட கந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்கள், படகு மற்றும் வாசனைத் திரவியங்களின் தொகுதி என்பன, மேலதிக நடவடிக்கைக்காக கரைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன.

Accessibility Tools