கண்டி திரித்துவக் கல்லூரி Triathlon போட்டித் தொடர் – 2026 இன் திறந்த விளையாட்டுக் கழக ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை பெற்றது
கண்டி திரித்துவக் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட Triathlon போட்டித் தொடர், 2026 ஒக்டோபர் 03 ஆம் திகதி கண்டி திரித்துவக் கல்லூரியின் கனிஷ்ட பாடசாலை விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றதுடன், அதில் திறந்த விளையாட்டுக் கழக ஆண்கள் பிரிவின் ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை முத்திறன் அணியினர் வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டனர்.
அதன்படி, Triathlon போட்டித் தொடர் ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைப் போட்டி, திறந்த ஆண்கள், பழைய மாணவர் ஆண்கள் மற்றும் திறந்த விளையாட்டுக் கழக ஆண்கள் என நான்கு (04) போட்டிப் பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இதில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி திறந்த விளையாட்டுக் கழக ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீரர் (சுழியோடி) கே.ஜி.எல் குமார, கடற்படை வீரர் (சுழியோடி) ஜே.டி.பி.பி ஜயசிங்க மற்றும் மின் தொழில்நுட்பவியலாளர் ஆர்.எம்.பி.எஸ் பண்டார ஆகியோர் ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.













