14 ஆவது பாதுகாப்புச் சேவைகள் எறிப்பந்தாட்டப் போட்டி – 2026’ ஆண்கள் சம்பியன் பட்டத்தை இலங்கை கடற்படை வென்றது
14 ஆவது பாதுகாப்புச் சேவைகள் எறிப்பந்தாட்டப் போட்டித் தொடர் 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்போது, சிறந்த விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை கடற்படையின் ஆண்கள் கைப்பந்தாட்ட அணி, 38–32 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவ அணியைத் தோற்கடித்து, 14 ஆவது பாதுகாப்புச் சேவைகள் ஆண்கள் எறிப்பந்தாட்டப் போட்டியின் சம்பியன் பட்டத்தை இலங்கை கடற்படைக்குப் பெற்றுக்கொடுத்தது.
இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடரில், சிறந்த வீரருக்கான விருதை லீடிங் சீமன் எச்ஏடி ஹெட்டிகொடவும், சிறந்த தற்காப்பு வீரருக்கான விருதை லீடிங் ரைடர் கேகேடி நுவன்ஜித்தும், சிறந்த தாக்குதல் வீரருக்கான விருதை லீடிங் சீமன் டபிள்யூஏசிபி விஜேவர்தனவும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில், கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் இந்திக எதிரிசிங்க, பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுச் சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரி கெப்டன் நிஸ்ஸங்க விக்கிரமசிங்க, கடற்படை எறிப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் கொமாண்டர் சுபுன் லீலாரத்ன உள்ளிட்ட முப்படைகளையும் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.













