SPORT NEWS › 2026

‘05th Asian Para Games - 2026’ இல் லீடிங் சீமன் எஸ்எம்ஏஎஸ்எம் சுபசிங்க வெண்கலப் பதக்கம் வென்றார்

27 Oct 2026

ஜப்பானின் Achi Nagoya இல் 2026 ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்ற ‘05th Asian Para Games - 2026’ இல், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் T47 பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்படையின் பரா விளையாட்டு வீரரான லீடிங் சீமன் எஸ்எம்ஏஎஸ்எம் சுபசிங்க, அப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்தார்.

இதன்படி, ஆண்களுக்கான 400 மீற்றர் – T47 ஓட்டப் போட்டியை 50.03 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை (01) வென்ற சீமன் எஸ்எம்ஏஎஸ்எம் சுபசிங்க, இலங்கை கடற்படைக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்ததுடன், சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கையின் கௌரவத்தையும் உயர்த்தினார்.

Accessibility Tools