ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசேட பயிற்சி நெறியின் நிறைவு விழா இலங்கைக்கான நோர்வேஜியானு தூதுவரின் தலைமையில் இடம்பெற்றது

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட கப்பல்களை அணுகுதல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நுட்பங்கள் குறித்த அதிகாரிகளுக்கான பயிற்சி பட்டறையின் நிறைவு விழா 2022 செப்டம்பர் 22 அன்று திருகோணமலையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேஜியானு தூதுவர் ட்ரீனா யுரென்லி எஸ்கடால் அவர்கள் கலந்து கொண்டார்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் (UNODC–GMCP) உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பல்களின் நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் முறைகள் கடல் பாதைகள் வழியாக செய்யப்படும் குற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான பாடநெறிகள் 2016 மே 04 முதல் நடைபெறுகின்றது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டின் ஏழாவது பாடநெறியாக 2022 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடநெறி, திருகோணமலை, கடற்படை விசேட கப்பல் படைத் தலைமையகம் மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் இரண்டு வாரங்களாக இடம்பெற்றது. நான்கு (04) இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் ஒரு (01) பெண் உத்தியோகத்தர், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஐந்து (05) அதிகாரிகள், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் நான்கு (04) அதிகாரிகள், மாலத்தீவு கடலோரக் காவல் துறையைச் சேர்ந்த ஏழு (07) அதிகாரிகள், ஒரு (01) பெண் அதிகாரி மற்றும் மாலத்தீவு கடற்றொழில் திணைக்களத்தின் ஒரு (01) அதிகாரி மற்றும் ஒரு (01) பெண் அதிகாரி உட்பட மொத்தம் 24 அதிகாரிகள் இந்த பாடநெறியில் பங்கேற்றனர்.

மேலும், இப்பயிற்சி நெறியின் இறுதிப் பயிற்சி 2022 செப்டெம்பர் 22 ஆம் திகதி திருகோணமலை ஃபவுல் துடுவைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் A521 என்ற கப்பலை மையமாகக் கொண்டஇலங்கைக்கான நோர்வேஜியானு தூதுவர் ட்ரீனா யுரென்லி எஸ்கடால் அவர்கன் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்வில் நோர்வேஜியானு தூதரகத்தின் பிரதிநிதிகள், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, கடற்படையின் சிறப்புக் படகுகள் படைத் தளபதி கெப்டன் நிஷ்சங்க விக்கிரமசிங்க, கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.