நிகழ்வு-செய்தி
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மற்றொரு கண்டுபிடிப்பை நிறுவியுள்ளது
இலங்கை கடற்படையால் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய எதிர்மறை அழுத்தம் தனிப்படுத்தல் அறைகள் (Negative Pressure Isolation Room) இன்று (2020 ஏப்ரல் 11) கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்டன.
11 Apr 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 26 நபர்கள் புறப்பட்டு சென்றனர்
பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 26 நபர்கள் 2020 ஏப்ரல் 08,10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
11 Apr 2020
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 3400 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் இன்று (2020 ஏப்ரல் 11) சுகாதார அமைச்சில் ஒப்படைக்கப்பட்டன.
11 Apr 2020
மன்னார், வட்டகண்டாய் பகுதியிலிருந்து நாங்கு 60 மிமி மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன
மன்னார், வட்டகண்டாய் பகுதியில் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நான்கு மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன.
11 Apr 2020
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு கப்பலை கடற்படை கைப்பற்றியது
2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் ஏராளமான ஹெராயின், ஐஸ் மற்றும் கெட்டமைன் ஆகிய போதைப்பொருளும் போதைப்பொருள் கொண்டு வந்த விற்பனையாளர்கள் மற்றும் பல வெளிநாட்டுக் கப்பல்களும் கைப்பற்றியது.
11 Apr 2020


