விளையாட்டு செய்திகள்
13வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்து போட்டியின் ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும் மகளிர் பெண்கள் அணி கடற்படை இரண்டாம் இடத்தையும் வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்து போட்டி 2025 மே 2 முதல் 10 வரை வெலிசறை கடற்படை கால்பந்து மைதானத்தில் நடைபெற்றதுடன், மேலும் கால்பந்து போட்டியின் ஆண்கள் அணி சாம்பியன்ஷிப்பையும் மகளிர் அணி கடற்படை இரண்டாம் இடத்தையும் வென்றது.
13 May 2025
வடக்கு பிராந்தியத்தில் தீவுகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியொன்றை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது

கடற்படைக்கும் வடக்கு பிராந்தியத்தின் பொதுமக்களிற்கும் இடையில் காணப்படும் நல்லிணக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளிற்கு அன்மையில் ஒரு கைப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இறுதிப் போட்டி 2025 ஏப்ரல் 29 அன்று காரைநகர் வேலப்பெட்டி கைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
06 May 2025
பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2025 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் மகளிர் ரக்பி போட்டி 2025 ஏப்ரல் 09 மற்றும் 30 ஆகிய திகதிளில் நடைபெற்றது, மேலும் கடற்படை ரக்பி அணி போட்டியின் சாம்பியன்ஷிப்பை வென்றது.
04 May 2025
'மஹாமெருவ ரேலி கிராஸ் - 2025' பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மஹாமெருவ ரேலி கிராஸ் - 2025' போட்டி, 2025 ஏப்ரல் 27 ஆம் திகதி கிரியுல்லவில் உள்ள மஹாமெருவ பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை விளையாட்டு வீரர்கள் மோட்டார் சைக்கிள் பிரிவில் வெற்றி பெற்றனர்.
02 May 2025
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளை வென்றது

இலங்கை கடற்படை பயிற்சி நிறுவனத்தின் துப்பாக்கி சுடும் தளத்தில் 2025 ஏப்ரல் 05 முதல் 08 வரை கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றதுடன், பயிற்சி கட்டளையின் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.
15 Apr 2025
03வது தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை வென்றது

03 வது தேசிய கைப்பந்து போட்டித் தொடர் – 2025 (03rd National Handball Championship) ஏப்ரல் 03 முதல் 06ஆம் திகதி வரை பனாகொடை இராணுவ உட்புற மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.
09 Apr 2025
13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் போட்டிதொடர் 2025 மார்ச் 24 முதல் 28 வரை நாரஹேன்பிட்டியவில் உள்ள இலங்கை இராணுவ டெனிஸ் மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், போட்டிகள் முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படைக்கான 13வது பாதுகாப்பு சேவைகள் டெனிஸ் சம்பியன்ஷிப்பை வென்றனர்.
07 Apr 2025
கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரில் - 2025 சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளை வென்றது

இலங்கை கடற் கபடைட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரின் - 2025 இறுதிப் போட்டியானது 2025 மார்ச் 28 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், கிழக்கு கடற்படை கட்டளையானது சாம்பியன் பட்டத்தை வென்றது.
05 Apr 2025
05th Mr. Master/Physique/Hercules 2025 உடற்கட்டமைப்பு போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்

2025 மார்ச் 23 அன்று ஹோமாகம, மேல் மாகாணம், கொழும்பு SAPCE PARK பூங்காவில் நடைபெற்ற 05th Mr. Master/Physique/Hercules 2025 இந்தப் போட்டியில் கடற்படை உடற்கட்டமைப்பு அணிக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது.
26 Mar 2025
2024/2025 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2024/2025 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி போட்டித் தொடர் 2024 டிசம்பர் 28 முதல் 2025 மார்ச் 14 வரை நடைபெற்றதுடன், குறித்த போட்டித் தொடரில் 2025 மார்ச் 14ஆம் திகதி அன்று, CR&FC விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 61-05 என்ற கணக்கில் வீழ்த்தி, கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.
18 Mar 2025