நடவடிக்கை செய்தி
தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 839 கிலோகிராம் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
15 Oct 2025
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 45 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்தைந்து (45) சந்தேக நபர்களுடன், பதினொரு (11) டிங்கி படகுகளுடன் கெப் வண்டியொன்றும் (01) இரண்டு (02) பல நாள் மீன்பிடி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
13 Oct 2025
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 05 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் 2025 அக்டோபர் 08 ஆம் திகதி மற்றும் இன்று (2025 அக்டோபர் 09) அதிகாலையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளையும் நாற்பத்தேழு (47) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
09 Oct 2025
கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி கிம்புல்பொக்க களப்பு பகுதியில் 2025 அக்டோபர் 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நூற்று ஐம்பது (150) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகையும் கைப்பற்றினர்.
08 Oct 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 07 ஆம் திகதி கல்பிட்டி நகர எல்லைக்குள், A7 பாதையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
08 Oct 2025
மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 56,870 மருந்து மாத்திரைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைபடுத்தப்பட்டன.
06 Oct 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 03 ஆம் திகதி கல்பிட்டி துடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
04 Oct 2025
கற்பிட்டி களப்பில், சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் 4 கிலோ 454 கிராம் தங்கத்தை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் 2025 அக்டோபர் 01 காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி (01) படகையும் கைப்பற்றப்பட்டனர்.
01 Oct 2025
கொழும்பு வேல்ல வீதியில் 1618 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைப்பற்றப்பட்டார்

கொழும்பு வேல்ல வீதிப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு தயார்நிலையில் வைத்திருந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு (1618) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
01 Oct 2025
யாழ்ப்பாணத்தில் 857 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் 2 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக இருந்த எண்ணூற்று ஐம்பத்தேழு (857) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்.
30 Sep 2025