சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 360 கிலோகிராம் பீடி இலைகள் நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

2026 பிப்ரவரி 26 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் முந்நூற்று அறுபது (360) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஒன்பது (09) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று அறுபது (360) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.