நடவடிக்கை செய்தி
இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை நிலாவெளியில் உள்ள ரெட்ரோக் கடற்கரைப் பகுதியில் 2025 ஜூலை 12 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வணிக வெடிபொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படைக்கு அனுப்பியுள்ளனர்.
17 Jul 2025
கல்பிட்டி கடற்பரப்பில் 1,349,640 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

2025 ஜூலை 14 ஆம் திகதி கல்பிட்டி வெல்லமுண்டலம் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் முந்நூற்று நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பது (1,349,640) மருந்து மாத்திரைகளை ஏற்றிச் சென்ற மூன்று டிங்கி படகுகளுடன் ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.
16 Jul 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1307 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
14 Jul 2025
யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அருகில் கடலில் கவிழ்ந்த “PERL LINK” கப்பலில் இருந்த பயணிகளை கடற்படையின் விரைவான நடவடிக்கையால் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை உதவியது

யாழ்ப்பாணத்தின் நெடுந் தீவிலிருந்து குறிகட்டுவான் ஜெட்டிக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிக்கொண்டு சென்ற "PERL LINK" என்ற பயணிகள் படகு 2025 ஜூலை 12 ஆம் திகதி கவிழ்ந்ததுடன், பன்னிரண்டு (12) சுற்றுலாப் பயணிகளையும் இரண்டு (02) பணியாளர்களையும் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை தேவையான உதவிகளை வழங்கியது.
14 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1330 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 12 ஆம் திகதி புத்தளம், அக்கரயணத்தீவு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) கிலோகிராம் மற்றும் முந்நூறு (300) கிராம் பீடி இலைகள், அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
14 Jul 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 13 அதிகாலையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
14 Jul 2025
வட கடலில் 15 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரள கங்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை 2025 ஜூலை 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பதினைந்து மில்லியன் ரூபாய்க்கு மேல் மொத்த தெரு மதிப்புள்ள சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் எழுநூறு (700) கிராம் கேரள கங்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
13 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் டெவில்ஸ் பொயிண்ட் கடற்கரையில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

கிளிநொச்சியின் டெவில்ஸ் பொயிண்ட் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) வாகனங்களும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருந்த மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் ஒரு தொகுதியுடன் 2025 ஜூலை 11ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.
12 Jul 2025
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
07 Jul 2025
புத்தளம் மற்றும் கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மற்றும் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூன் 20 முதல் 30 வரை) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளுடன் ஒரு (01) லொரியையும், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.
07 Jul 2025