ரியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.கே பெரேரா கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ஏறக்குறைய 33 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.கே பெரேரா இன்று (2020 நவம்பர் 30) ஓய்வு பெற்றார்.

30 Nov 2020

கடற்படை மரைன் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற 54 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவில் இணைக்கப்பட்டு அடிப்படை தகுதி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஐம்பது (50) மாலுமிகள் 2020 நவம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் வெளியேறினர்.

25 Nov 2020

கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் கொடி ஆசீர்வாதம் பூஜை மற்றும் “கஞ்சுக” பூஜை நடைபெற்றது

2020 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழா 2020 நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

13 Nov 2020

புதிய விமானப் படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 18 வது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று கடற்படைத் தலைமையகத்தில் (நவம்பர், 04) சந்தித்தார்.

09 Nov 2020

திருகோணமலை கடலுக்கு அடியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கடற்படை பங்களிப்பால் அகற்றப்பட்டது.

நீருக்கடியில் சேகரிக்கப்பட்ட பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டமொன்று 2020 நவம்பர் 2, அன்று திருகோணமலை கடல் பகுதி மையமாக கொண்டு கடற்படையால் மேற்கொள்ளப்பட்டன.

03 Nov 2020

கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க,இன்று (2020 நவம்பர் 02) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

02 Nov 2020