இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்குத் தேவையான மருத்துவ பொருட்கள், படுக்கைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 04 மற்றும் 11 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.