நிகழ்வு-செய்தி

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை வீராங்கனைக்கு தர உயர்வு

பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்று இலங்கை கடற்படைக்கும் நாட்டிற்கும் மகத்தான புகழ் கொண்டு வந்த இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் ரூ. 250,000.00 பெறுமதிவாய்ந்த நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

16 Jul 2021

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது. கடற்படை அதிகாரிகளின் பிரதி பிரதானியும் தற்போதையவட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் தலைவருமான ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தொடர்தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமாரி முகவர் நிலையம், கடற்படையின்தேசிய நீரியல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

16 Jul 2021