இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது. பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.