நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது (2021- IMO Award for Exceptional Bravery at Sea) வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ (International Maritime Organization – IMO) வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.