2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘Best Web 2021' போட்டியின் விருது வழங்கும் விழா 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி LK Domain Registry நிருவனத்தில் நடைபெற்றதுடன் இலங்கை கடற்படையின் 'www.navy.lk' உத்தியோகபூர்வ இணையத்தளம் மிகவும் பிரபலமான இணையத்தளமாகத் அங்கு தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன் சிறந்த இணையத்தளங்கள் அரசாங்கப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் வென்றது. இவ்விருது வழங்கும் நிகழ்வில் பெறப்பட்ட விருதுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களிடம் 2022 பெப்ரவரி 08 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.