‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2022 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வாவின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த வருடத்திற்கான வழங்கல் கருத்தரங்கின் கருப்பொருள் ‘Opportunity of Revolutionary Logistics in Naval Context to Counter Challenges in Third Decade of Twenty First Century, என்பதானது. இந்த மாநாடு இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது, இதன் போது LLMC பாடம் எண் 6 இன் மாணவர் அலுவலர்கள் தங்கள் தலைப்புகளை ஆழமாக ஆராய்ந்த பின்னர் அவர்கள் கற்றுக்கொண்டவற்றை விளக்கி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

அதன்படி, முதல் அமர்வு ‘Contemporary naval logistics in pandemic; challenges, opportunities and way forward’என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வு ‘Innovations, constraints and opportunities of Naval Logisticians under digitalization’என்ற தலைப்பிலும் இடம்பெற்றது.

மேலும், காகிதமற்ற பயன்பாடு என்ற கருத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டுடன் இணைந்து மின்னியல் சஞ்சிகை ஒன்றை பணிப்பாளர் நாயகம் வழங்கள் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வா ஆரம்பித்து வைத்தார். மேலும், தலைமை உரையை கடற்படை பணிப்பாளர் (சம்பளம் மற்றும் ஓய்வூதியம்) கொமடோர் ஆர்.ஏ.சி.என் ரத்நாயக்க நிகழ்த்தினார்.

குறித்த வழங்கல் கருத்தரங்கின் முடிவில், 6வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறியின் 19 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, அங்கு லெப்டினன்ட் கமாண்டர் யொஹான் வணிகசேகர பாடநெறியில் சிறந்து விளங்குவதற்கான சான்றிதழும், கடல்சார் மற்றும் கல்வித்துறையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அதிகாரியாகவும் சான்றிதழ்கள் பெற்றார். லெப்டினன்ட் கமாண்டர் கிஹான் பிரேமதிலக்க மிகவும் ஆர்வத்துடன் பாடத்திட்டத்தை மேற்கொண்டுள்ள அதிகாரி என்ற வகையில் பரிசுகளையும் கோப்பைகளையும் வென்றார்.

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் கட்டளைத் தளபதி கொமடோர் டேமியன் பெர்னாண்டோவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் 6 வது விசேட விநியோக முகாமைத்துவ பாடநெறியின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடுக்காக கடற்படைத் தலைமையகம் மற்றும் பிற கடற்படைப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தளவாட வல்லுநர்கள், பிற அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் பிடத்தின் பயிற்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.