கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 30 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 30 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2022 மே 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.

இங்கு 25 கடற்படை தாதிகளுக்கு மற்றும் 05 விமானப்படை தாதிகளுக்கு தொப்பிகள் அணித்தல் மற்றும் விளக்குகள் வழங்குதல் சுகாதார அமைச்சின் இயக்குநர் (தாதி கல்வி) திருமதி அசோகா அபேநாயக்க, இயக்குநர் (தாதி மருத்துவ சேவைகள்) திருமதி எம்.பி.சி சமன்மலி, இயக்குநர் (தாதி மற்றும் பொது சுகாதாரம்) திருமதி பீ.டீ குசுமலதா உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த விருந்தினர்களால் நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் துணை பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் டாக்டர் லால் பனாபிடிய அவர்கள், கடற்படை துணைத் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் வை.என் ஜயரத்ன, பிரதித் துணைத் தலைமைத் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கான தலைமை ஆலோசகர், அறுவை சிகிச்சை நிபுணர் ரியர் அட்மிரல் ஜிஎஸ்ஆர் ஜெயவர்தன, இயக்குநர் பொது பயிற்சி ரியர் அட்மிரல் தம்மிக குமார, செயல் இயக்குநர் பொது சுகாதார சேவைகள் அறுவை சிகிச்சை நிபுணர் கமடோர் பி.ஜே.பி மராம்பே உட்பட மூத்த அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சிறப்பு தர தலைமை தாதி அதிகாரிகள் கடற்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.