நிகழ்வு-செய்தி

ரிம் ஒப் த பெசிபிக் - 2022 (RIMPAC) பலதரப்பு கடல்சார் பயிற்சிக்காக கடற்படை குழுவொன்று தீவை விட்டு வெளியேறியது

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல் குழுவால் (US Pacific Fleet) நடத்தப்படும் Rim of the Pacific 2022 (RIMPAC 2022) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க 50 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய இலங்கை கடற்படைக் குழு இன்று காலை (ஜூன் 04, 2022) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானத்தில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது. அங்கு ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான கென்பரா (HMAS Canberra) கப்பலின் உறுப்பினர்களுடன் இனைந்து இலங்கை கடற்படை மரைன் படையணி இரண்டு வார பயிற்சியின் பின்னர் அமெரிக்கா, ஹவாய் மற்றும் தெற்கு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் RIMPAC 2022 கடல்சார் பயிற்சியில் பங்கேற்கும்.

04 Jun 2022