கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா 2022 ஜூன் 13 ஆம் திகதி காலை கொழும்பு பேராயர் மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பெருந்தொகையான கத்தோலிக்க பக்தர்கள் கலந்துகொண்ட இந்த ஆன்மிக விழாவை நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் தமது உதவிகளை வழங்கினர்.