கல்வியில் சிறந்து விளங்கிய கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவனத்தினால் விருதுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கற்கைநெறிகளில் சிறந்து விளங்கிய இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையால் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 2022 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள நிபுணத்துவ சங்க அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 29வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் கல்விப் பாடநெறிகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு அவர்களின் தொழில்சார் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் இலங்கைக் கிளை மூலம் 2017 ஆம் ஆண்டு முதல் விருதுகள் மற்றும் நினைவு சின்னங்களை வழங்கத் தொடங்கியது.

இதன்படி, ஆறாவது தடவையாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், 2021-2022 கல்வியாண்டில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடத்தப்பட்ட நீண்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் பாடநெறியில் சிறப்பாக செயல்பட்டதற்காக லெப்டினன்ட் கமாண்டர் என்.சி கருணாரத்ன மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் கே.டி.பி.குலசிங்க ஆகியோருக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் இலங்கைக் கிளையால் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு குறித்த கிளையின் தற்போதைய தலைவர் கப்டன் (வணிக கப்பல் சேவைகள்) நிமல் பெரேரா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்த அதிகாரிகளுக்கு கடல்சார் நிறுவனத்தின் அங்கத்துவமும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் கடற்படைத் தளபதி பேராசிரியர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொலம்பகே, கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் மகேந்திர வீரரத்ன, கொமடோர் காஞ்சன பானகொட, கடற்படை இயக்குனர் கடற்படை நபர்கள் மற்றும் பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் இலங்கைக் கிளையை பிரதிநிதித்துவப்படுத்தி கொமடோர் ரவீந்திர திசேரா, பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் இலங்கைக் கிளையை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உப தலைவர் கப்டன் (வணிக கப்பல்கள் சேவை) ரொஹான் கொடிப்பிலி, செயலாளர் கப்டன் (வணிக கப்பல்கள் சேவை) கீத் ஜயசூரிய உட்பட கடல்சார் நிருவனத்தின் இலங்கைக் கிளையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.