கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்ணாகொட ஆகியோருக்கிடையில் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜனவரி 20) அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்ணாகொடவை கொழும்பு, எத்துல் கோட்டேவில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டமை குறித்து அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்ணாகொட தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கடற்படையின் முன்னேற்றம் தொடர்பான பல விடயங்கள் குறித்தும் அவர்கள் சுமுகமான கலந்துரையாடலை நடத்தினர்.

இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார், அவர் தானே தொகுத்த புத்தகமொன்று கடற்படைத் தளபதியிடம் அன்பளிப்பு செய்தார்.