இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு.தரிக் எம்டீ அரிபுல் இஸ்லாம் (Tareq Md Ariful Islam) அவர்கள் இன்று (2023 ஜனவரி 22) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோண் அவர்களை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து நட்பு ரீதியாக கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம்.டி.ஷாபியுல் பாரி (Commodore Md Shafiul Bari) அவர்களும் கலந்து கலந்துகொண்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.