இந்திய கடற்படையின் ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 பிப்ரவரி 27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Sukanya’ என்ற கப்பல் 101 மீட்டர் நீளமும், மொத்தம் 106 பணியாளர்களை கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி Commander Pranav Anand மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பொன்று இன்று (2023 பிப்ரவரி 27) காலை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும், ‘INS Sukanya’ கப்பலை பார்வையிடுவதற்காக காலி/தியகிதுல்கந்த ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று வரவுள்ளதுடன் அவர்களுக்கு இந்திய கடற்படையினரால் வழங்கப்பட்ட பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

மேலும், ‘INS Sukanya’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நாட்டின் முக்கிய இடங்களை மற்றும் பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர், ‘INS Sukanya’ என்ற கப்பல் 01 மார்ச் 2023 அன்று தீவை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு இலங்கை கடற்படைக் கப்பலொன்றுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடல் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.