இலங்கை முப்படை மருத்துவ அறிவியலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் இணைந்து பிராந்திய கூட்டமொன்றை திருகோணமலையில் நடத்தியது.

இலங்கை முப்படை மருத்துவ அறிவியலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் இணைந்து 2023 மே 18 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரண்னாகொட கேட்போர் கூடத்தில் ஒரு பிராந்திய கூட்டமொன்றை நடத்தியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் கீழ் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு இலங்கை முப்படை மருத்துவ அறிவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கொமடோர் நந்தனி விஜேதோரு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் திருமதி வின்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான அறிஞர்களின் தொடர் விரிவுரைகள் இடம்பெற்றன.

இதன்படி, டாக்டர் சஜித் எதிரிசிங்க, பேராசிரியர் இந்திக கருணாதிலக, அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு பெற்ற) (ஜூம் தொழில்நுட்பம் மூலம்) மற்றும் கௌரவ ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் ஆலோசகர் டாக்டர் ஆனந்த மல்லவதந்திரி ஆகியோர் இங்கு உரை நிகழ்த்தினர்.

மேலும், இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள், திருகோணமலை பிரதேசத்தின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தின் சில மாணவர்கள் கலந்து கொண்டனர்.