நிகழ்வு-செய்தி

பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS SHAHJAHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS SHAHJAHAN' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 02,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

02 Jun 2023

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள், பிரியாவிடை மற்றும் அறிமுகத்திற்கான உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் Colonel Paul Clayton மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள Colonel Darren Woods ஆகியோர் உத்தியோகபூர்வ பிரியாவிடை மற்றும் அறிமுக சந்திப்புக்காக இன்று (2023 ஜூன் 01), கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தனர்.

02 Jun 2023