நிகழ்வு-செய்தி

சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு வருகை

2023 ஜூன் மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொன்டுள்ள சீன மக்கள் குடியரசு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மேஜர் ஜெனரல் Zhang Changsheng தலைமையிலான ஐம்பத்தாறு (56) அதிகாரிகள் கொண்ட குழு 2023 ஜூன் 23 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளதுடன் அங்கு குறித்த குழுவின் தலைவருக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

24 Jun 2023

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டுள்ளது

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 22 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து இன்று (2023 ஜூன் 23) தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் புறப்படும் ‘IKAZUCHI (DD-107) கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு இணங்க பிரியாவிடை வழங்கினர்.

24 Jun 2023