இலங்கையின் நடைபெறுகின்ற ஒரே இணையத்தள மதிப்பீட்டுப் போட்டியான 'LK Domain Registry' நிருவனம் மூலம் நடத்தப்படுகின்ற 'BestWeb.lk 2023' போட்டியில், இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.navy.lk பொதுத் துறையில் சிறந்த இணையத்தளப் பிரிவின் கீழ் தங்க விருதையும், 750க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் பங்குபற்றிய ஒட்டுமொத்த போட்டியில் வெண்கல விருதையும் வென்றது.