நிகழ்வு-செய்தி
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE (DD-106)’ கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டு புறப்பட்டது
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூலை 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE (DD-106)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து இன்று (2023 ஜூலை 29) இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகு கப்பலுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் தீவிலிருந்து புறப்பட்டதுடன் குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய கடற்படை பிரியாவிடை வழங்கியது.
29 Jul 2023
இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Khanjar’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூலை 29) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
29 Jul 2023


