நிகழ்வு-செய்தி

கொமடோர் ஜகத் லியனகமகே கடற்படையின் வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்

கொமடோர் ஜகத் லியனகமகே, இலங்கை கடற்படையின் வரவு செலவு மற்றும் நிதிக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக இன்று (2023 ஆகஸ்ட் 15,) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி அலுவலகத்தில் பதவியேற்றார்.

15 Aug 2023

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஊர்காவற்துறை செட்டிப்புலம் ஆரம்ப பாடசாலையின் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், கொழும்பு றோயல் கல்லூரியின் ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முன்னாள் மாணவர் அறக்கட்டளை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டாக்டர். ஜே.ஐ.டி. ராஜய்யா (Dr. JIT Rajiyah) அவர்களின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்ட ஊர்காவற்துறை செட்டிப்புலம் தமிழ் ஆரம்ப பாடசாலையின் வகுப்பறைகள் கட்டிடம் மற்றும் பிற அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தலைமையில் 2023 ஆகஸ்ட் 14 ஆம் திகதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

15 Aug 2023

ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ரஜிந்த சேரம் தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 ஆகஸ்ட் 15) ஓய்வு பெற்றார்.

15 Aug 2023