சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு, இந்தப் பணிகள் அனைத்து கடற்படை கட்டளைகளும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, 2023 செப்டம்பர் 16, ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் காக்கா தீவு மற்றும் காலி முகத்துவார கடற்கரையும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் டச்பே கடற்கரையும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஊறுமலே கடற்கரையும் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஹுனெஸ் நகரிருந்து கரதக்குலிய வரையுமான கடற்கரை பகுதியும் மையமாக கொண்டு இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்கள் கடற்படை தளபதி, கட்டளை தளபதிகள் மற்றும் ஏராளமான கடற்படையினரின் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கடற்கரைகளில் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக், பாலிதீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு, கடலில் சேராத வகையில் கடற்கரையில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும், தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி சதுப்புநில நடவு நிகழ்ச்சியையும், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் திடக்கழிவுகளை வெளியேற்றுவதை குறைக்கும் வகையில் மீனவ சமூகத்திற்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தையும் நடத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.