தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பிரிவு அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதியினால் இரவு விருந்து வழங்கப்பட்டது

இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு கற்கை நெறியை பயிலும் உத்தியோகத்தர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் இரவு விருந்து குறித்த அகாடமியின் பாடநெறி இலக்கம் இரண்டை (02) சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு 2023 நவம்பர் 17 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் இல்லத்தில் வழங்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் இராணுவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாடநெறியை கற்கும் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்களுக்காக கடற்படை தளபதியினால் இந்த இரவு விருந்து வழங்கப்படுகிறது. இதன்படி, இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா மற்றும் அவரது மனைவி உட்பட கற்கைநெறியைச் சேர்ந்த முப்படை அதிகாரிகள், கல்வியகத்தின் ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களை கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி. மாலா லமாஹேவாவினால் கடற்படை கட்டளை அதிகாரியின் தங்குமிடத்திற்கு அன்பாக வரவேற்ற பின்னர் இந்த பாரம்பரிய இரவு விருந்து நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு கற்கை நெறியில் கல்வி கற்கும் மாணவர் உத்தியோகத்தர்களுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டு அந்த அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

மேலும், கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.