ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க கடற்படை பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி பதவியை பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க, இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி பதவியை இன்று (2024 ஜனவரி 24) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க, பணிப்பாளர் நாயகம் வரவுசெலவு மற்றும் நிதிப் பணிப்பாளராக பொறுப்பேற்பதற்கு முன்னர் கடற்படை துனை வழங்கள் பணிப்பாளராக கடமையாற்றினார்.

இதன்படி, வரவு-செலவு மற்றும் நிதிப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ரியர் அட்மிரல் சமிந்த ஜயபால, புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்கவிடம் அப்பதவியின் பொறுப்புகளை ஒப்படைத்தார்.