ரியர் அட்மிரல் ருவன் களுபோவில கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் பதவியை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் வழங்கலாக ரியர் அட்மிரல் ருவன் களுபோவில இன்று (24 ஜனவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வழங்கல் அலுவலகத்தில் பதவியேற்றார்.

ரியர் அட்மிரல் ருவன் களுபோவில, பணிப்பாளர் நாயகமாக பதவியேற்பதற்கு முன்னர் கடற்படை பிரதானியின் செயலாளராகவும் கடற்படை செயலாளராகவும் பணியாற்றினார்.

இதன்படி, பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க, புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ருவன் களுபோவிலவிடம் அந்தப் பதவிக்கான கடமைகளை கையளித்தார்.