இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறியின் Colonel Anand Bajpai தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு இன்று (05 பெப்ரவரி 2024) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

இந்த அதிகாரிகள் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்து சிநேகபூர்வ சந்திப்பை நடத்தியதன் பின்னர், கடற்படையின் பங்களிப்பு குறித்து அவர்களுக்கு தெரிவு படுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் கர்னல் ஆனந்த் பாஜ்பாய் ஆகியோருக்கு இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.