மதவாச்சி பிரதேச பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையின் ஆதரவு

இலங்கை கடற்படையின் சமூக சேவையாக, அநுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி பிரதேசத்தில் அ/புல்எலிய வித்தியாலயம், அ/துலாவெல்லிய வித்தியாலயம் மற்றும் ரம்பேவ கினிகடுவெவ வித்தியாலயம் ஆகியவற்றில் கடற்படை திறன்கள், உழைப்பு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பரோபகாரரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகள் 2024 பிப்ரவரி 05 ஆம் திகதி குறித்தப் பாடசாலைகளில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளின் நவரத்னவின் மேற்பார்வையின் கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ் வடமத்திய கடற்படைக் கட்டளையின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் திறன், உழைப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் பரோபகாரி ஒருவரின் நிதி நன்கொடையால் இந்த முழுமையான சுகாதார வசதிகள் அக்கல்லூரிகளின் கல்வி பயின்று வருகின்ற மாணவர்களின் பயன்பாட்டிற்கு கடற்படையால் நிர்மானிக்கப்பட்டது.

அத்துடன் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான சூழலை தயார்படுத்தும் வகையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சமூகப் சேவைத் திட்டங்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் பாராட்டப்பட்டன.

மேலும், இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் எம்.ஏ.எல் பெரேரா உட்பட வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வசதிகளை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.